விமான நிலையத்தை பரபரபாக்கிய சீன நாட்டு வர்த்தகர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Green Channel) ஊடாக ரூபா 42 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது இன்று (15.11.2026) செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 42 வயதுடைய சீன பிரஜையாவார்.

மேலதிக விசாரணை
சந்தேக நபர் இன்று காலை 09:10 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து மலேசிய விமான சேவைக்கு சொந்தமான MH-497 விமாணம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் அவர் கொண்டு வந்த 2 பொதிகளுக்குள் மிகச் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மதிப்பு 42 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை தற்போது தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.