உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய வாழ்வக மாணவர்கள் நால்வரும் சித்தி பெற்று சாதனை!
இன்றையதினம் வெளியான 2022 - 2023 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய வாழ்வக மாணவர்கள் நால்வருமே சித்திபெற்றுள்ளனர்.
செல்வன் சந்திரகுமார் அமல அசாம் (யா/யூனியன் கல்லூரி) அரசியல் விஞ்ஞானம், கிறிஸ்தவ நாகரிகம், தமிழ் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் 13 ம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 693 ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
செல்வி தமிழரசி ஜெயக்குமார் (யா/இராமநாதன் கல்லூரி) இந்து நாகரிகம் A, தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S சித்தி பெற்றுள்ளார்.
செல்வன்யேசுதாஸ் அலக்ஸ் றனிஸ்ரன் (யா/யூனியன் கல்லூரி) கருநாடக சங்கீதம் B, கிறிஸ்தவ நாகரிகம் C, தகவல் தொடர்பாடல் கற்கை C பெற்று சித்தி பெற்றுள்ளார்.
செல்வி நாகராஜா மியூசிகா (யா/இராமநாதன் கல்லூரி) தமிழ் C, அரசியல் விஞ்ஞானம் S, கிறிஸ்தவ நாகரிகம் S பெற்று சித்தியடைந்துள்ளார்.
எம் அனைவருக்கும் பெருமை தேடித்தந்த இவ்வன்பு மாணவச்செல்வங்களை அகம் மகிழ்ந்து வாழ்த்துவதில் வாழ்வக சமூகம் பெருமிதமடைகின்றது.