விரைவில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!
இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பிலான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த புதிய சட்டம் பெரும் சர்ச்சைக்குரிய 1978ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தினை பதிலீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உத்தேச புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரீ (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை ரத்து செய்து விட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்றை அறிமுகம் செய்வதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் தொடர்ச்சியாக இலங்கையிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட கொடூரத்தின் பின்னணி வௌியானது
தமிழர் பகுதியொன்றில் சிறுமிக்கு பல தடவைகள் நடத்தப்பட்ட கொடூரம் ; துயரை ஏற்படுத்தும் குடும்பப் பின்னணி