மத நிகழ்வுகளுக்கு யானை வழங்குவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்
தலதா பெரஹர மற்றும் பிற மத நிகழ்வுகளுக்கு வளர்ப்பு யானைகளை வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர், எந்தவொரு கலாசார நிகழ்விற்கும் யானைகளை வழங்குவது தொடர்பில் எத்தகைய தடைகளையும் அல்லது கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.

குறித்த கலாசார நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் வசதிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இது தொடர்பாக எதிர்காலத்தில் நிபுணர் குழுவொன்றுடன் இணைந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்