பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்; சோகத்தில் திரையுலகம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) காலமாகியுள்ள நிலையில் அவரது மறைவு திரையுலகில் பெரும் துரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் கோலோச்சிய நடிகை
ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய நடிகை தான் சௌகார் ஜானகி.
‘வளையாபதி’ என்கிற படத்தில் 1952ல் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றிவிழா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
94 வயதாகும் அவருக்கு சில தினங்கள் முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இன்னிலையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.