பிரித்தானியாவில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி!
பிரித்தானியாவில் எரிவாயுவின் விலை இன்று கணிசமாக குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதாக அறிவித்த பின்னரே பிரித்தானியாவில் எரிவாயுவின் விலை ஒருவழியாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 37 விகிததால் அதிகரித்திருந்த எரிவாயுவின் விலை ரஷ்யா ஐரோப்பாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதாக தெரிவித்த பின்னர் 400 பென்சாக உயர்ந்து இருந்த ஒரு தேர்ம் எரிவாயு குறைவடைந்துள்ளது.
பிரித்தானியாவில் சமீப நாட்களாக எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரித்த காரணத்தால் நாட்டில் பல எரிசக்தி விற்பனை செய்யும் நிறுவனங்கள் திவாலாகி மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா அதிபர் புடின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரித்தானியாவில் ஒரு தேர்ம் எரிவாயுவின் விலை 275 பென்ஸ் ஆக குறைவடைந்துள்ளது.