தமிழர் பகுதியொன்றில் வீதியில் வீசப்படும் குப்பை ; தமிழ் முஸ்லீம் உறவை விரிசலாக்கும்
அம்பாறை கல்முனை மாநகர சபையின் எல்லைக்கட்பட்ட பாண்டிருப்புப் பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்கரை வீதிகள், தனியார் காணிகள் மற்றும் மயானங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து வீசப்படும் வீட்டு குப்பைகள், அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேட்டையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருவதாக சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அறியப்படாத நபர்கள் இந்த பகுதிகளில் தங்கள் வீட்டு கழிவுகளைவீசுவதால், பொதுமக்களுக்கு அசெளகரியம் மற்றும் மனவேதனையை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலைமையை எதிர்த்து, பிரதேச இளைஞர்கள் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன் இரவு நேரத்தில் குப்பை வீசிய நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மருதமுனையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் என்பது தெரிய வந்தது.
பதற்றம் ஏற்படாதவாறு, அவரது குடும்பத்தை கருத்தில் கொண்டு, அவருடைய புகைப்படம் வெளியிடப்படாமல் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
மீண்டும் சில நாட்களில், மற்றொரு இளைஞர் முற்றிலும் இதேபோல் பிடிக்கப்பட, அவரும் மருதமுனையைச் சேர்ந்தவராகத் தெரியவந்தார்.
அத்துடன், 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை, மூன்றாவது முறை, முச்சக்கரவண்டியில் குப்பை வீசிய நபரையும் இளைஞர்கள் பிடித்து விசாரித்தனர். அவரும் மருதமுனையைச் சேர்ந்தவர் என்பதும் உறுதியாகியது.
இந்தச் சம்பவங்களால் பாண்டிருப்பு – மருதமுனை இடையிலான இன நல்லுறவில் விரிசல் ஏற்படுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது.
எனவேஒரு குப்பை வீசுகின்ற விவகாரம் உறவைச் சீர் கெடுப்பதை ஏற்க்கமுடியாது எனும் அடிப்படையில் மருதமுனை நண்பர்கள் சகோதரர்கள் தயவு செய்து இந்த விடயத்திலே நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் உங்கள் வீட்டுக் குப்பைகளை நீங்கள் உங்கள் வீட்டிலே வைத்துக் கொள்ளுங்கள்
அல்லது உங்கள் வீட்டின் முன்புறமாக வீதியில் வையுங்கள் மாநகர சபையினுடைய குப்பை அள்ளுகின்ற வாகனம் வரும் அதிலே போடுங்கள் அல்லது முறையாக ஏதாவது ஒரு இடத்தில் குப்பைத் தொட்டி அமைத்து அங்கே அந்தக் கழிவுகளைக் கொட்டுங்கள்
இவ்வாறு உங்கள் வீட்டு குப்பைகளை இன்னும் ஒருவர் காணியிலும்,வீதியிலும் பொது இடங்களில் வீசுவதும் என்பது உங்கள் வீட்டுப் பிள்ளைகளை,மனைவியை நடுத்தெருவில் வீசிவிட்டுப் போவதற்குச் சமம் எனவே தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் திருந்துங்கள்.
இதுவும் இறுதியான பொறுமை இழந்த பதிவாகவே நான் பதிவிடுகின்றேன். ஆனாலும் இந்த விடயம் தொடர்பிலே மருதமுனை அனைத்து பள்ளிவாசல் சமூகம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா போன்ற பொது ஸ்தாபனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க இருக்கிறோம்
அதன் பின்னரும் இந்த நிலை தொடருமாக இருந்தால் நிச்சயமாக பாண்டிருப்பு மருதமுனையின் இன நல்லுறவு குப்பையால் குப்பையாகி விடும் என்பதையும் மன வேதனையோடு பதிவிடுகின்றேன் இது குப்பைகளுக்கான பதிவு தயவுசெய்து எவரும் இதை தனிப்பட்ட பதிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.