யாழில் தம்பதியினரின் மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட தம்பதியினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்து இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.