யாழில் ஒருவரை தாக்க கூரிய ஆயுதங்களுடன் சென்ற கும்பல்! இளைஞர்களின் வீர செயல்
யாழ் சுன்னாகம் பகுதியிலிருந்து கடந்த 9ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் 3 பேர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர்.
அப்பகுதி இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் சென்றவர்களை பிடித்த நிலையில் அதில் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இளைஞர்களால் பிடிக்கப்பட்டவர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும், இரும்பு கம்பி மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக தருமபுரம் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நாளைய தினம் (11.05.2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதான சந்தேக நபருக்கு யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்பான வழக்குகள் உள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.