இளம்பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ; 3 பேர் கைது
தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய மொகித் என்பவர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து 25 வயதுடைய இளம்பெண்ணை மீன்பிடித் துறைமுகம் அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
அங்கு, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக மூவரும் இணைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தின் போது அந்த பெண்ணிடமிருந்து ரூ.2,500 பணம், ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்களும் பறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி நகர துணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த விசாரணைகளை சுனில் தலைமையில் நான்கு தனிப்படைகள் முன்னெடுத்தன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மொகித், ரிதீஷ் மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.