6 வயது சிறுமியை கூட்டாக சீரழித்து மாடியிலிருந்து வீசியெரிந்த கும்பல் ; சினிமாவை மிஞ்சிய கொடூரம்
உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அதே பகுதியால் வசிக்கும் 2 இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை
அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குற்றத்தை மறைக்க, வன்கொடுமை செய்தபின் அந்தச் சிறுமியை மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதைக் கண்டு குற்றவாளிகள் தப்பியோடினர். பலத்த காயமடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தலைமறைவான 2 போரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.