சொந்த வாழ்க்கையில் ஜனாதிபதி அனுரவின் தியாகமும் ..அர்ப்பணிப்பும்; சேறு பூசும் எதிர்கட்சிகள்!
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரவை இலங்கை வாழ் மூவின மக்களும் கடவுளாக கொண்டாடி வரும் நிலையில், அவரது சொந்தவாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவத்தை , எதிர்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி சேறு பூசி அவதூறு பரப்பிவருகின்றனர்.
ஜனாதிபதி அனுரகுமார அவரது சித்தியை திருமணம் செய்தவர் என எதிர்கட்சிகள் சேறுபூசிவரும் நிலையில், ஜனாதிபதியின் சொந்த வாழ்க்கையின் தியாகமும் அர்ப்பணிப்பும் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் பகீர் பின்னனி ; மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை
தம்பியை சுட்டுகொன்ற எதிர்கட்சிகள்
ஜனாதிபதி அனுரகுமார சித்தியை திருமணம் செய்ததாக வெளியான தகவல் உண்மைக்கு புறப்பானது என்றும், மறைந்த தனது சகோதரனின் மனைவியையே அவர் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனுரகுமாரவின், தாயாரின் தங்கை மகனும், அனுரகுமாரவின் தாயாரிடமே வளர்ந்து வந்துள்ளார். இருவரும் ஒரே வயதுடையர்கள் என்பதுடன் இருவரும் சேர்ந்தே அரசியலில் காலடி எடுத்து வைத்தனர்.

காலபோக்கில் ஜனாதிபதி அனுரவின் சகோதரர் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்து இன்புற்று வாழ்ந்துள்ளனர்.

அக்காலகட்டத்தில் எதிர்கட்சிகள் , ஜனாதிபதி அனுரவின் சகோதரரை சுட்டுக்கொன்றுவிட்டனர். இதனால் தம்பியின் மனைவியும் , குழந்தையும் நிர்க்கதிக்குள்ளாகினர்.
இதனையடுத்து தம்பியின் மனைவியையும் குழந்தையும் தாமே ஏற்பது என முடிவு செய்த ஜனாதிபதி அனுர குமார, விதவைப்பெண்ணான தம்பியின் மனைவிக்கு வாழ்வுகொடுத்து சிறந்ததொரு அர்ப்பணிப்பை செய்துள்ளார்.
எனினும் எதிர்கட்சிகள் அதனை திரிபுபடுத்தி சித்தியை மணந்ததாக பொய்யான தகவலை பரப்பி ஜனாதிபதி அனுர குமார மீது சேறுபூசி அவதூறு பரப்பி வருகின்றமை வேதனைக்குரியதாகும்.