இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா இஷாரா செவ்வந்தி
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்தாது.
இந்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல்
எனினும் இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காவல்துறை அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் இதுபோன்ற நபர்களை இதற்கு முன்பு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.
இருப்பினும், அவர் தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளாரா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், , அவரைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.