சரிகமப இறுதிச்சுற்று ; மேடையில் கண்ணீர் விட்டழுத இலங்கை தமிழ் இளைஞன் ; ரசிகர்கள் மகிழ்ச்சி!
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சபேசன், தென்னிந்திய தொலைகாட்சியில் இசை நிகழ்ச்சி சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு சபேசன் தெரிவாகி உள்ளார்.
மிக கடும் சவால்களை சந்திந்து சரிகமப நிகழ்ச்சி ஊடாக தனக்கென ஓர் இடத்தை இசை ரசிகர்களின் மனதில் திருக்கோவில் சபேசன் , பிடித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இவரது பாடல் தேர்வுகள் பெரும்பாலும் ரசிகளையும் , நடுவர்களையும் மிகவும் கவந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
சபேசன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானதில் இருந்து, அவருக்குச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
நாட்டில் பாடசாலை மற்றும் கிராமத்துக் கலை நிகழ்வுகளில் தனது வசீகரமான குரல் வளத்தால் பல பாடல்களைப் பாடி, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர் சபேசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ள சபேசன் வெற்றி மகுடத்தை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.