பிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த பதின்ம வயது மாணவிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி
பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது.
காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவி ஒருவரே இவ்வாறு வீட்டிலிருந்து பீர் எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.
பெற்றோர்கள் கேள்வி
இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே மாணவிகள் பீர் அருந்திய விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவி பாடசாலைக்கு எவ்வாறு பியர் எடுத்து வந்தா, அதை பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என பிள்ளைகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
You My Like This Video