காலிமுகத்திடல் போராட்டம் : உலக அமைதி போராட்டங்களின் ஒரு வடிவமே!
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , படித்தவர்கள் புத்திசாலிகள் என நினைத்தாலும் எல்லோரும் புத்திசாலிகள் அல்ல.
காந்தி இந்திய நாட்டை மீட்டது உப்பு சத்தியாகிரகத்தினால்தான் .... அது ஆயுத போராட்டத்தால் அல்ல.
1986ஆம் ஆண்டில் மணிலாவில் லட்சக்கணக்கான பிலிப்பின்ஸ் மக்கள் தெருக்களுக்கு வந்து அமைதிப் பேரணியாகச் சென்று, மக்கள் அதிகார இயக்கமாக நான்கு நாட்கள் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக மார்க்கோஸ் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தது.

2003ஆம் ஆண்டில், ஜார்ஜியாவில் ரத்தமின்றி நடைபெற்ற ரோஜா மலர் புரட்சியில் எட்வர்டு ஷெவர்ட்நாட்சே ஆட்சி அகற்றப்பட்டது.
போராட்டக்காரர்கள் ரோஜா மலர்களைக் கையில் ஏந்தி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தனர்.
சூடான் மற்றும் அல்ஜீரியாவில் நடந்த அமைதிவழிப் போராட்டங்கள் காரணமாக, தசாப்தங்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த அதிபர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

எல்லா நிகழ்வுகளிலும், சாமானியர்களின் எதிர்ப்பால் அரசியல் அதிகாரங்கள் சாய்க்கப்பட்டு, அடிப்படை நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
எரிகா செனோவெத் நடத்திய ஆய்வில், மக்கள் பணிய மறுப்பது தார்மிக வாய்ப்பாக இருப்பதுடன் மட்டுமின்றி, உலக அரசியலை பெரிய அளவில் உருவாக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகவும் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் நடந்த நூற்றுக்கணக்கான பிரச்சார இயக்கங்களை ஆய்வு செய்த செனோவெத், அமைதிவழி பிரச்சார இயக்கங்கள், வன்முறை இயக்கங்களைவிட இரு மடங்கு அதிக வெற்றி வாய்ப்பு கொண்டதாக இருந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.

சரியான செயலாற்றல் பல அம்சங்களைப் பொருத்து அமையும் என்றாலும், தீவிரமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, மக்கள் தொகையில் 3.5% மக்கள் தீவிரமாகப் போராட்டங்களில் பங்கேற்றாலே போதுமானதாக இருந்திருக்கிறது.
ஆப்பிரிக்க - அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளர் சோஜோர்னர் ட்ரூத், வாக்குரிமை கேட்டுப் போராடிய சூசன் பி. அந்தோணி, இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்தி, அமெரிக்க மக்கள் உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் போன்ற அனைவருமே அமைதிவழிப் போராட்டத்தின் சக்தியை ஏற்றுக் கொள்ளத்தக்க அளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, வன்முறை போராட்டங்களைவிட, அமைதிவழிப் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரு மடங்காக இருந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான வன்முறைப் போராட்டங்களின் வெற்றி வாய்ப்பு 26% ஆக இருந்த நிலையில், அமைதிவழிப் போராட்டங்களின் வெற்றி வாய்ப்பு 53% ஆக அந்தக் காலக்கட்டத்தில் இருந்திருக்கிறது.
இது ஒரு பகுதி எண்ணிக்கையின் பலத்தைப் பொருத்து அமைந்திருக்கிறது. பரவலான பகுதிகளில் இருந்து உறுப்பினர்களை சேர்ப்பதால், நகர்ப்புறங்களில் இயல்பு வாழ்க்கையை முடக்கும் வகையிலும், சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் செயல்படலாம்.

உண்மையில், அவர்கள் ஆய்வு செய்த 25 பெரிய போராட்டங்களில், 20 போராட்டங்கள் அமைதி வழியிலானவை. அவற்றில் 14 போராட்டங்கள் முழு வெற்றியில் முடிந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வன்முறைப் போராட்டத்தில் சராசரியாக பங்கேற்பவர்களை (50,000) விட, அமைதிவழிப் போராட்டத்தில் சராசரியாகப் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை (200,000) நான்கு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.
மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக இருப்பதால் காவல் துறை மற்றும் ராணுவத்தினரின் ஆதரவும் இதற்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.போராட்டத்தை ஒடுக்க அரசு இந்த இரு தரப்பினரையும் தான் நம்பியிருக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி அமைதிவழியில் போராடும்போது, தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்பத்தினரும் அதில் இருக்கக் கூடும் என்று பாதுகாப்புப் படையினரிடம் அச்சம் ஏற்படலாம் - அதனால் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் முற்படாமல் போகலாம்.
"அல்லது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தங்களுடைய கப்பலின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது, இனியும் கப்பலுடன் சேர்ந்து மூழ்க வேண்டாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிடக் கூடும்''
"ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் காட்டிலும், மக்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தாத வகையில், அமைதிவழிப் போராட்டங்களை நடத்துவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக எண்ணிக்கை அதிகரிக்கும்போது இதற்கான தேவை இருக்கிறது.''
"நாம் சொல்லும் பல வரலாறுகள் வன்முறையின் மீது கவனம் செலுத்துபவையாகவே உள்ளன - அவை மொத்தமாகப் பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்குள்பட்டு தான் வெற்றி பெறுவதற்கு வழி காண முற்படுகிறோம்'' ஆனால் அமைதிவழிப் போராட்டங்களால் வெற்றி கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        