தென்னிலங்கையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு!
காலி - அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்றைய தினம் (21-10-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
25NVT
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அஹுங்கல்ல, உரகஹாவில் உள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்று பேரும் பலாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.