மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கைதில் வெடித்தது புதிய சர்ச்சை
இன்று கைது செய்யப்பட்டவர்கள் பிணை வழங்கமுடியாத பரீட்சைகள் நிலையம் சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் ஊடாக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது என மக்கள் முன்னணியின் ஆதரவாளர் தவரூபன் தனது முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது தொடர்பில் வெளியான கருத்துக்கள்...,
நன்றாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், கட்சித் தலைவர் நீதிமன்றம் செல்லாத ஒரு சட்டத்தரணியாக இருந்தாலும் சட்டத்தரணி பரம்பரையில் உள்ளவரிற்கு உயர்தர / சாதாரண தர பரீட்சை நடைபெறும் நிலையங்களிற்கருகில் ஒன்று கூடுவதும் , அதன் வளாகத்தில் பொலீசாரோடு முறன்படுவதும் இப்படியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இருந்துள்ளாரே.
பரீட்சை நிலையம் தொடர்பான சுவரொட்டிகள் நிச்சயம் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவ் இடத்தில் பரிட்சைக் காலத்தில் ஒன்று கூடுவது சட்டத்திற்கு முறன் என பொலிஸ் தரப்பில் கூறப்படும் நியாயம், இந்த சூழலில் அதில் கைது செய்யப்பட்டுள்ள கட்சியின் செயற்பாட்டாளர்களை நினைத்துத் தான் பெரும் கவலை.
இதே போன்று கடந்த காலங்களில் குறித்த கட்சிக்காக அரசியல் வேலைகளில் ஈடுபட்டதால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று சில வருடங்களின் முன்பு நடந்தது.
இப்படியாக பெரும் சிக்கலாக மாறியுள்ளது இவ் விவகாரம்.