பெரும் அரசியல் தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு கஜேந்திரகுமார் இரங்கல்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Tamil nadu R. Nallakannu
By Sulokshi Feb 26, 2026 09:10 AM GMT
Report

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,

செஞ்சூரியன் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு ஈழத்தமிழர்களின் செவ்வஞ்சலி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும்தலைவர் தோழர் இ.நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

பெரும் அரசியல் தலைவர் நல்லக்கண்ணு மறைவுக்கு கஜேந்திரகுமார் இரங்கல் | Gajendra Kumar Condoles The Passing Of Nallakannu

நல்லக்கண்ணு ஐயாவை நாம் இன்று கனத்த இதயத்துடன் நினைவிற் கொள்கிறோம்

2009-ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு (Srilanka State) ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடத்தித் தமிழினப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது தமிழகம் அதற்கெதிராகக் கொந்தளித்தது.

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்பி அஞ்சலி

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்பி அஞ்சலி

அப்போது, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டங்களை நடத்திய 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை' தோற்றுவித்ததில் நல்லக்கண்ணு ஐயா ஆற்றிய பங்கு அளப்பரியது.

அதுமட்டுமல்லாது, ஐதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதில் முன்னின்று உழைத்த பெருமகனார் நல்லக்கண்ணு ஐயாவை நாம் இன்று கனத்த இதயத்துடன் நினைவிற் கொள்கிறோம்.

அரசியல் அடக்குமுறைகளுக்கும், பெரும் பண்ணையார்களின் குடியானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், சாதியத் தீண்டாமைகளுக்கும் எதிராக எண்ணற்ற பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியமைக்காக ஏழு ஆண்டுகாலம் கொடும் சிறைவாசம் அனுபவித்தவர்.

சிறைவாசம் அவரது கொள்கை உறுதியை மேலும் புடம் போட்டது. விடுதலையான பின்பு முன்பை விட சமத்துவ சமுதாயம் காண்பதற்கு வேகமாகயும் தீவிரமாகவும் அவர் களப்பணியாற்றியதை உலகத் தமிழர்கள் என்றும் நினைவிற் கொள்வார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். ஆனால், நல்லக்கண்ணு ஐயாவின் நேர்மை, எளிமை, உறுதி, தன்னலமற்ற தியாக வாழ்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு கட்சியின் சட்டவிதியை அகில இந்திய மாநாடு திருத்தியமைத்து அவர் நான்கு முறை பதவி வகிக்க வைத்தது.

கட்சியும் மக்களும் அவர் மீது பேரன்பு கொண்டிருந்த நிலையில் அவரால் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் பெரும் பதவிகளைக் கூடப் பெற்றிருக்க முடியும்.

ஆனால் பதவிகளை பெற்றிடவிரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து மறைந்தார். இந்திய மக்களை மாத்திரமல்லாமல் ஈழத்தமிழர்களையும் நெஞ்சிருத்தி வாழ்நாள் பூராவும் செஞ்சூரியனாக ஒளிர்ந்த நல்லணக்கண்ணு ஐயாவுக்கு தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது செவ்வஞ்சலியைச் சிரந்தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது.

அதேவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US