க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
நாட்டில் இன்றைய தினம் (04-06-2023) வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, ஹெனானிகல வெவாவில் நீரில் மூழ்கி 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
4 பேர் ஒரு குழுவுடன் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காலி ஹபராதுவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மொனராகலை கும்புக்கன் ஓயாவில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உறவினர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.