க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியானத் தகவல்

Kirushanthi
Report this article
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் (04.01.2024) ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (29.12.2023) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதிரி வினாத்தாள்களை விநியோகிப்பது மற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் (04.01.2024) ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் (31.01.2024) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.