எரிபொருள் பவுசர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பு
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஐக்கிய இலங்கை எரிபொருள் தாங்கி ஊர்திகளின் உரிமையாளர்கள் சங்கம், இன்று முதல் தனது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்திருந்தது.
சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போதைய நிர்வாகம் சிதைத்துள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடதக்கது.