வேலை கிடைக்காத விரக்தி; இளைஞரின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்
தமிழகத்தின் மதுரையில் ஓய்வுபெற்ற சுங்க துறை அதிகாரி ஒருவரின் மகன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அக் குடியிருப்பில் சுங்கத் துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் என்பவரது ஒரே மகனான கிருஷ்ணமூர்த்தி (வயது 33) என்பவர் வசித்து வருகிறார். எம்.இ பட்டதாரியான இவருக்கு உரிய வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சென்ற சுப்பிரமணியபுரம் பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.