தரையிறங்கும் போது தொழிற்படாத விமானத்தின் முன்புற சக்கரம் ; விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய 133 உயிர்கள்
ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி தரையிறங்கியது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் .விமானத்தில் இருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

சேதமடைந்த ஓடுதளம்
இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளம் சேதமடைந்தது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிகழ்வால் பயணிகள் பீதி அடைந்தனர்.
Crash Landing -
— Chaudhary Parvez (@ChaudharyParvez) March 11, 2026
Air India Express confirmed that its #Hyderabad–#Phuket flight on March 11 experienced a nose wheel issue during landing at #PhuketAirport, resulting in a hard landing.
The crew followed all safety protocols and all passengers were safely deplaned. No injuries… pic.twitter.com/3nIm9KoY3q