இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸின் சொத்துக்களை முடக்கிய அதிகாரிகள்!
இலங்கை நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் (Jacqueline Fernandez) சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அதன்படி நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் (Jacqueline Fernandez) வங்கிக் கணக்குகளிலுள்ள 7.12 கோடி இந்திய ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையை இந்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருந்து கம்பெனி உரிமையாரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். அந்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை பொலிவூட் நடிகைகளுக்கு செலவு செய்துள்ளதாகவும் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த இலங்கை பின்னனியை கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) சில பரிசுப் பொருள்களைப் பெற்றமையும் விசாரணைகளில் தெரியவந்தது.
ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பான தங்க ஆபரணங்கள், குதிரை, 15 ஜோடி தோடுகள், 5 ஆடம்பர கைப்பைகள், பெறுமதியான 4 பூனைக் குட்டிகள் போன்ற பல பரிசுப்பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், ஜாக்குலின் (Jacqueline Fernandez) சகோதரிக்கும் சகோதரருக்கும் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய டொலர்களையும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, ஜாக்குலினை பல முறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு (Jacqueline Fernandez) சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த 7.12 கோடி ரூபாய் நிரந்தர வைப்புப் பணம் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் , தொழிலதிபரின் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு கணித்துள்ளது.
மேலும் சுகேஷ் சந்திரசேகர் , ஜாக்குலின் (Jacqueline Fernandez) குடும்ப உறுப்பினர்களுக்கு 1.73 லட்சம் அமெரிக்க டொலர், 27 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர் கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.