முழங்கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
முழங்கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்க கண்டி தேசிய மருத்துவமனையின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்லாந்தின் அனுசரணையில் இலவசமாக இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக, கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட வறிய மக்களுக்காக இந்த இலவச சிகிச்சை வழங்கப்படுவதாகவும் கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்றிட்டத்தின் ஊடாக சுமார் 100 பேருக்கு, முழுமையான முழங்கால் மாற்று சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.