கனடா ஆசையில் ஏமாறும் யாழ்ப்பாண மக்கள்; பெரும் தொகை இழந்த குடும்ப பெண்!
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ர குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்.
அதே பகுதியில் பலரிடம் மோசடி
பணம் பெற்ற பின்னர் அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிசாரின் உதவியுடன் நேற்று செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை இன்று கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த மருதங்கேணி பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதேவேளை,தன்னுடைய பணத்தை மோசடி செய்த குறித்த பெண்ணிடம் இருந்துதனக்குரிய பணத்தை மீள பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை சந்தேகநபருக்கு 2024ம் ஆண்டு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.