500 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி; வெளியான மேலதிக தகவல்
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கைதான சந்தேக நபருக்கு , கடந்த 2021ஆம் ஆண்டு தென் மாகாணத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றின் தேரரால் குறித்த சொத்துக்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நாரஹேன்பிட்டியில் உள்ள காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தீர்ப்பதற்கு சந்தேக நபர் குறித்த தேரருக்கு 160 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த தேரர் காணியை விற்பனை செய்யவுள்ளதாக சந்தேகநபரிடம் கூறிய தேரர், சந்தேக நபரிடம் 80 இலட்சம் ரூபாவை மாத்திரமே வழங்கியுள்ளார்.
இதனையடுத்து தேரர் சந்தேக நபரிடம் நாரஹேன்பிட்டியில் உள்ள காணியை சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.