வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்!
வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடி செய்த சந்தேகநபரை மோசடி விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் பிரித்தானியா மற்றும் போலந்தில் தொழில் வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சுதித் கசுன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோசடி விசாரணை பணியகத்திற்கு கிடைத்த 07 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.