நான்கு வயது மகன் ஆன்லைனில் பாடம் படிக்காததால் தாயின் விபரீத முடிவு!
நான்கு வயது மகன் ஆன்லைனில் பாடம் படிக்காததால் மகனை கொன்று, தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி 23 வயதான சிக்கா.
இவர்களது மகன் 4 வயதான ரிதான். சிறுவன் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். இந்நிலையில், சிறுவன் ரிதான் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டு தனமாக இருந்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த, சிறுவனின் தாய் சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.
இதன் காரணமாக , சிறுவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தான். இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சிக்கா தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து வீட்டில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதேவேளை அண்மையில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்குக் கட்டாயப் படுத்திய தனது தாயை, அவரிதன் 15 வயது மகள் கொலை செய்த சம்பத்தைத் தொடர்ந்து, இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.