50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.

மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.