சிஐடிக்கு சென்ற நான்கு முன்னாள் அமைச்சர்கள்!
கடந்த அரசாங்கத்தின் நான்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் இன்று சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ரொஷான் ரணசிங்க, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகிய நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
182 வகையான மருந்துகளை இறக்குமதி
கடந்த அரசாங்கத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விசாரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்க அமைச்சரவையிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.