யாழில் 9000 கடல் அட்டைகளுடன் நாங்கு பேர் கைது
யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(15) இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது, 02 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குச் சொந்தமான கல்முனை முனை கடற்படைப் பிரிவினால், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைகளின் தொகுதியுடன் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு (04) சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகுகளும் இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.
34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.