யாழில் நால்வர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இன்று நால்வர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 4 பேரும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்களுள் , வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே கைது செய்யப்பட்டனர்.
தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது.
இவ்வாறு செல்வதற்கு அவர்கள் படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.