கடலில் மிதந்து வந்த பொதியை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் இன்று (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு மீனவர்களும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
சம்பவத்தில் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரு மீனவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
பாதிக்கபப்ட்ட மீனவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.