மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெண்டர் நடைமுறைகளுக்குப் புறம்பாக பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கி அரசுக்கு 4,160,000 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட மீறலாக, உரிய டெண்டர் முறையைத் தவிர்த்து குறித்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளித் தரப்பினருக்கு பயனளித்து, 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரசன்ன சஞ்சீவ இன்று (15) காலை 9.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.