ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு ! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) மீது துப்பாகிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் ரயில் நிலையம் அருகே மக்கள் முன் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) உரையாடிக் கொண்டு இருந்துள்ளார் . அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.
அந்த குண்டு ஷின் சோ அபேவின் (Shinzo Abe) உடலில் பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஷின் ஷோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
NHK World Japan 's TV footage of Shinzo Abe being shot pic.twitter.com/niucWs9Xyu
— Eric Sturrock (@EricSturrock) July 8, 2022
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் (Shinzo Abe) உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது