முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
நேற்றையதினம் அவர் இவ்வாறு சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

அவர் எதிர்வரும் புதன்கிழமை (18) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தொடர்ந்து, அவர் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரமும் உள்நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.