வைத்தியர் விஜித் குணசேகரக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் விஜித் குணசேகரவை மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் புதன்கிழமை (08-05-2024) வைத்தியர் குணசேகரனை கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) வாக்குமூலத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அவரை இன்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.