முன்னாள் எம் பி நந்தன குணதிலக்க மரணம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார்.
சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயதாகும்.

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆரம்பகால உறுப்பினரான இவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
பின்னர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்துகொண்ட அவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாணந்துறை நகர சபையின் மேயராகவும் பதவி வகித்தார்.
மறைந்த நந்தன குணதிலகவின் இறுதி ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.