இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த 10 இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு நேற்று முன்தினம் (22-09-022) மாலை சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்பகுதியில் மதுபோதையில் இருந்த 10 இளைஞர்கள் குறித்த இருவரையும் தகாத வார்த்தையால் பேசியதுடன் குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து சிரமத்துடன் தப்பிச்சென்ற இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸார் 10 இளைஞர்களையும் கைதுசெய்தனர்.
கைது செய்த இளைஞர்களை நேற்றைய தினம் (23-09-2022) ஊர்காவற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களில் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் 10 இளைஞர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.