செல்பி மோகத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
சுற்றுலா ரயிலில் பயணித்த ஈரானிய பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
எல்லவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த சுற்றுலா ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலத்த காயங்களுக்குள்ளான ஈரானிய பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 37 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும், பல்கலைக்கழக மாணவன் ஒருவனும் ரயிலில் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.