இலங்கையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
செப்டெம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 32,536 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 7,906 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், சீனாவிலிருந்து 6,409 பேரும், ஜேர்மனியிலிருந்து 5,440 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,642,215 ஆக பதிவாகியிருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.