வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 16,610 ஆகும்.
இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (பிரித்தானியா) வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.
1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும். இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆக பதிவாகியுள்ளது.