நடுறோட்டில் பொலிஸ் அதிகாரியின் வெறிச்செயல் ; பிறந்தநாளன்று துடிதுடித்து பிரிந்த மனைவியின் உயிர்
இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாநது.

அடிக்கடி குடும்ப தகராறு
எனினும் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (13) பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்றபோது கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வைத்தியசாலை அருகே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது , மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.