இலங்கை மக்களை பெரிதும் பாதித்த அயல்நாட்டு அரசியல்வாதியின் டுவிட்டர் கருத்து!
இலங்கையில் இடம்பெறும் போராட்டம் தொடர்பில் திருவாளர் சுப்பிரமணியம் சுவாமி ட்விட்டர் மூலம் வெளியிடப்பட்ட கருத்தானது இலங்கை மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கை வாழ் குடி மக்களால் அகிம்சை வழியிலும் அமைதியான முறையிலும் போராட்டத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி கவிழ்க்கபட்டு விரட்டபட்டார்.
குறிப்பாக நல்லாட்சியை உருவாக்கி கொலை, கொள்ளை, அடித்தவர்களை மக்களால் வெளியேற்றபட்டார்கள். ஆனால் தற்போது இலங்கையில் யுத்தம் ஏதேனும் நடக்கவில்லை.
இவர் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஊழலாட்ச்சி பேர்வழிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே இவரின் கூற்றை உடனடியாக பகிரங்கமாக திரும்ப பெற்றுக்கொண்டு எமது மக்களின் அறவழி போராட்டத்தை கௌரவபடுத்துவது அவரின் மனிதாபிமானத்திற்கு பொருத்தபாடுடையதாகும். என சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஹாட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் மோகன் கேட்டுக் கொண்டார்.