வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி தூங்கிய சாரதிக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வைரலாகும் காணொளி
தம்புள்ளை கலேவெல பகுதியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியின் கையை அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

சட்ட நடவடிக்கை
குறித்த காணொளியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியை இளைஞன் ஒருவர் பெரிய தடி ஒன்றினால் நபர் ஒருவரை தாக்குவதுடன் இது தொடர்பில் முரண்படுகின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தின் போது தாக்கப்பட்ட நபரின் கைகளில் பலமான காயம் ஏற்பட்டிருப்தையும் குறித்த நபர் வலியால் துடிப்பதையும் காணமுடிகின்றது.
சம்பவத்தின் போது தாக்குதலை ஏற்படுத்திய நபர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதையும் குறித்த காணொளியில் காண முடிகின்றது.
சாதாரண விடயங்களுக்காக இது போன்று மிலேச்ச தனமாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.