மின் கட்டணங்களை செலுத்தாதவர்களுக்கு வருகின்றது ஆப்பு!
நாட்டில் தொடர் மின் தடை அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக சில வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவ்வாறானவர்களுக்கு , அவர்களுக்கு சில காலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.