நண்பர்களுடன் சுற்றுலா செல்வோரின் கவனத்திற்கு ; பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நண்பர்களுடன் சிரமப்பட்டு திட்டமிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணங்களை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாக முடித்துவிட்டுத் திரும்புமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கூடுதல் அவதானம்
இதற்கமைய, வாகனங்களைச் செலுத்துபவர்கள் போக்குவரத்துச் சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிப்பதோடு, அதிக வேகத்தைத் தவிர்த்து, சோர்வு ஏற்படும்போது ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு குறித்து அறியாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறும், இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து குப்பைகளை உரிய இடங்களில் அப்புறப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரணங்கள் போன்ற பெறுமதிமிக்க பொருட்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும், நீங்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை உங்கள் குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.