வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது
வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்பு, அமிலத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது நாள் முழுவதையும் பயனற்றதாக்கிவிடும்.
எனவே, இதை முன்கூட்டியே கவனித்துக்கொள்வது அவசியம். வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது, அதற்கான காரணங்கள் என்ன என தெரிந்துகொள்வோம்.

டீ மற்றும் காபி
பலர் தங்கள் நாளை டீ மற்றும் காபியுடன் தொடங்குகிறார்கள். ஆனால் அது சரியல்ல. வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி அருந்துவது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இது வாயு, நெஞ்செரிச்சல், மற்றும் வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

எலுமிச்சை நீர்
பலர் உடல் எடையைக் குறைப்பதற்காக காலையில் எலுமிச்சை நீர் அருந்துகின்றனர். வெறும் வயிற்றில் எலுமிச்சையில் உள்ள அமிலம் வயிற்றின் உள்சவ்வுகளில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இரைப்பைப் புண் அல்லது அமில எதுக்களிப்பு உள்ளவர்கள் குறிப்பாகக் கவனமாக இருக்க வேண்டும்.

வாழைப்பழம்
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் சமநிலையைக் குலைத்து, சோர்வு அல்லது இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்

தயிர்
தயிரை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு வெறும் வயிற்றில் தயிர் உட்கொண்டால், அதில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமானத்தைத் தடுக்கக்கூடும். இது அஜீரணம் மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை உணவுகள்
வெறும் வயிற்றில் சர்க்கரை அல்லது இனிப்பு உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவில் திடீர் உயர்வை ஏற்படுத்தக்கூடும். இது சோர்வு, தலைச்சுற்றல் அல்லது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
